ஸ்தோத்திரம் ஏற்றி போற்றுவோம்
எங்கள் தேவ தேவனை
கூடியே இன்பமாய் ஏக
மனதுடனே மகிபனை (2)
1. பாவத்தை போக்கிய தேவா ஸ்தோத்திரம்
பாதையும் சத்தியமும் ஜீவனே ஸ்தோத்திரம்
ஞான குருவே ஸ்தோத்திரம்
மெய்யான புகலிடமே ஸ்தோத்திரம்
2. நோய் பிணி யாவையும்
சுமந்தீரே ஸ்தோத்திரம்
நேத்திரம் போலென்னை
காத்தீரே ஸ்தோத்திரம்
பேரின்பரே ஸ்தோத்திரம்
பாய்ந்தோடும் ஓளஷதமே ஸ்தோத்திரம்
3. சோதனை வேளையில் ஜெயமே ஸ்தோத்திரம்
சோர்ந்திடும் வேளையில்
திடமே ஸ்தோத்திரம்
சொல் தவறீரே ஸ்தோத்திரம்
சந்ததமே சாற்றிடுவேன்
ஸ்தோத்திரம்
4.பரிசுத்த ஜீவியமே அளித்தீரே ஸ்தோத்திரம்
பரலோக பாக்கியம் ஈந்தீரே ஸ்தோத்திரம்
சேர்த்திடுவீர் ஸ்தோத்திரம்
விண் வீட்டில் மகிழ்ந்திடவே ஸ்தோத்திரம்
5. ஆதியும் அந்தமும் நீரே ஸ்தோத்திரம்
அதிசய நடுத்துதற்காகவம் ஸ்தோத்திரம்
அல்லேலுயா ஸ்தோத்திரம்
என்றென்றும் ஆரணனே ஸ்தோத்திரம்
HOME
More Songs